கிளிநொச்சியில் 131 கிலோ கஞ்சா மீட்பு..!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதநகர் பகுதியில் 131 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பதில் பொறுப்பதிகாரி பி.பி. குலதிலக்க தலமையிலான குழுவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த 131 கிலோ கஞ்சா மீட்கப்படுள்ளது.
மீட்கப்பட்டுள்ள கஞ்சா கிளிநொச்சி பொலிசாரால் நீதிமன்றில் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய தகவல்கள் வெளியாகியுள்ளன.




