2026 October 10, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 23° ☀️ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வெள்ளவத்தையில் கம்பன் விழா: தமிழ் கலாசாரத்தை முன்னிறுத்தும் சிறப்பு நிகழ்வு!

உள்ளூர்May 4, 2026 · 5 months முன்6
வெள்ளவத்தையில் கம்பன் விழா: தமிழ் கலாசாரத்தை முன்னிறுத்தும் சிறப்பு நிகழ்வு!

தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவாகக் கருதப்படும் “கம்பன் விழா” நேற்று (03) பிற்பகல் வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் கலாசார, இலக்கிய மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

சிறந்த தமிழ் கவிஞரான கம்பரின் நினைவாக, அகில இலங்கை கம்பன் கழகம் 1980ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கழகம் இலக்கியம், நடனம் மற்றும் இசை ஆகிய துறைகளை மையமாகக் கொண்டு, இளைய தலைமுறையினரை கலாசார விழுமியங்கள், தேசப்பற்று மற்றும் தர்ம நெறிகளின் வழியில் வழிநடத்தும் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

கம்பன் கழகம் ஆற்றிவரும் இச்சேவையை பாராட்டி, இவ்விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.