2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 36°
LIVE
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!

புதிதாக அமையவுள்ள “தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகம்

உள்ளூர்December 20, 2025 · 8 months முன்0
புதிதாக அமையவுள்ள “தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகம்

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையவுள்ள ” தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகத்திற்கான காணியை வழங்க 4 நன்கொடையாளர்கள் இதுவரையில் முன்வந்துள்ளார்கள் எனவும், காணிகளை வழங்க விரும்புவோர் எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் அது தொடர்பில் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு மேலதிகமாக ” தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகம் புதிதாக அமையவுள்ளது.

அதற்கான காணிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல், தென்மராட்சி பிரதேச செயலர் சந்திரா சத்தியஜோதி தலைமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை , சாவகச்சேரி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

அதில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் பொன்னையா குகதாசன் , யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளரும் , யாழ் . மாநகர சபை உறுப்பினருமான எஸ், கபிலன் , அரச அதிகாரிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அதன் போது , புதிய பிரதேச செயலகத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க இது வரையில் நால்வர் முன் வந்துள்ளனர் எனவும் , எதிர்வரும் 31ஆம் திகதி க்கு முன்னர் வேறு யாரேனும் காணிகள் வழங்க விரும்பின் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டது.

அடுத்த வருடம் முதல் வார கால பகுதியில் பொருத்தமான காணியினை தெரிவு செய்த பின்னர் , பிரதேச செயலகம் அமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.