2026 August 29, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 35°
LIVE
பாண் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் வருமா?இலங்கை உள்ளிட்ட நாடுகளின் மீட்புக் குழுக்களுக்கு அனுமதி இல்லை!நிரம்பி வழியும் புதிய ஏரி – மற்றொரு பெருவெள்ளம் வருமா?இன்று நண்பகல் இலங்கையின் சில பகுதிகளுக்கு நேராக சூரியன்!வடக்கு–கிழக்கு தமிழர் பிரச்சினைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!திபெத்தில் மீண்டும் அணை உடைப்பு – நேபாளத்தில் அவசர எச்சரிக்கை!பாராளுமன்றத்திலேயே நிறைவேற்றலாம் – மனுதாரர்கள் கோரிக்கை!நேபாளத்தில் தொடரும் வெள்ளப் பேரிடர் – மீட்புப் பணிகள் தீவிரம்!

பாராளுமன்றத்திலேயே நிறைவேற்றலாம் – மனுதாரர்கள் கோரிக்கை!

உள்ளூர்August 28, 2026 · 24 hours முன்5
பாராளுமன்றத்திலேயே நிறைவேற்றலாம் – மனுதாரர்கள் கோரிக்கை!

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் ஒரு மனு சிஹல உருமயவின் தலைவர் சரத் மனமேந்திரவாலும், மற்றைய மனு ஓய்வுபெற்றோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் கே. சரத் லால் பெரேராவாலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுக்களில் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் சட்டப்பூர்வமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.