2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

ஈரான் தூதுவர் இலங்கைக்கு கொடுத்த உறுதி

உள்ளூர்March 23, 2026 · 5 months முன்2
ஈரான் தூதுவர் இலங்கைக்கு கொடுத்த உறுதி

மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் நிலவி வரும் சூழலில், இலங்கைக்குத் தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், மசகு எண்ணெய் அல்லது ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு ஈரான் எந்நேரமும் தயாராக உள்ளது. இலங்கை மக்கள் எவ்வித இன்னல்களையும் எதிர்கொள்வதை ஈரான் விரும்புவதில்லை என அவர் குறிப்பிட்டார்.