2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

“ஈரானுக்கு உடனடி உடன்பாடு தேவை – ட்ரம்ப்”

உலகம்May 15, 2026 · 3 months முன்2

ஈரானுடன் நிலவும் போர்ச் சூழல் தொடர்பில் தனது பொறுமை எல்லை கடந்து செல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் மேற்கொண்ட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து, பீஜிங்கில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அமெரிக்க ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். 

தற்போது நிலவும் நெருக்கடியான சூழலைத் தணிப்பதற்கு ஈரான் உடனடியாக ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். 

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, மத்திய கிழக்கின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையை திறந்த நிலையில் வைத்திருப்பது மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்பில் சீனாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.