2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்

உள்ளூர்August 24, 2025 · 1 year முன்1
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

“வயது காரணமாக அவரது இரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது, ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆபத்தான நிலையில் இல்லை” என்றும் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறைச்சாலை மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை கிடைக்காததன் அவசியத்தை சுட்டிக்காட்டிய மருத்துவ மதிப்பீடுகளைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க நேற்று தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க, குற்றபுலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அவர் முதலில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.