2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நிலக்கரி விவகாரம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட தகவல்

உள்ளூர்April 18, 2026 · 4 months முன்1
நிலக்கரி விவகாரம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட தகவல்

தரம் குறைந்த நிலக்கரி விநியோகிக்கப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நட்டம் அரசாங்கத்திற்கோ அல்லது மக்களுக்கோ அல்ல, மாறாக சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்திற்கே ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் பதவி விலகல் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை விளக்கினார்.

அமைச்சர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்..

நிலக்கரி இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய சுமார் 915 கோடி ரூபா நிதியை எரிசக்தி அமைச்சு தற்போது தடுத்து வைத்துள்ளது.

தரம் குறைந்த நிலக்கரி காரணமாக சுமார் 8,000 மில்லியன் ரூபா (800 கோடி) நட்டம் ஏற்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், அரசாங்கம் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 915 கோடி ரூபாவை தன்வசம் வைத்துள்ளது.

இந்த நட்டம் எக்காரணம் கொண்டும் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

குறித்த நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 15 மில்லியன் டொலர் (சுமார் 450 கோடி ரூபா) பெறுமதியான செயல்திறன் பிணைமுறி அரசாங்கத்திடம் உள்ளது. அத்துடன், 3 கப்பல்களுக்கான கொடுப்பனவுகளில் சுமார் 500 கோடி ரூபா இதுவரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.