2026 October 11, Sunday ⛅ கொழும்பு 26° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இந்திய கடற்படையின் INS ஐராவத் கொழும்பு வருகை!

உள்ளூர்June 4, 2026 · 4 months முன்6
இந்திய கடற்படையின் INS ஐராவத் கொழும்பு வருகை!

இந்திய கடற்படைக்குச் சொந்தமான INS ஐராவத் என்ற போர்க்கப்பல், செயல்பாட்டுப் பராமரிப்பு மற்றும் நட்புறவு பயணத்தின் ஒரு பகுதியாக ஜூன் மாதம் முதலாம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை, கடற்படை மரபுகளுக்கு அமைவாக இலங்கை கடற்படையினர் உத்தியோகபூர்வமாக வரவேற்றனர்.

தளபதி ஐ.பி. பாட்டீல் தலைமையிலான இந்த தரையிறங்கும் பீரங்கிக் கப்பல், இந்திய கடற்படையின் முக்கிய போர் மற்றும் ஆதரவு கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், கப்பலின் அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள், இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல தொழில்முறை மற்றும் நட்புறவு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், இரு நாடுகளுக்கிடையிலான கடற்படை ஒத்துழைப்பையும் நல்லுறவையும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், தமது பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்னர், இந்திய கடற்படை வீரர்கள் இலங்கையின் பல வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விஜயம், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான கடற்படை ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.