2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இந்த மாதம் அதிகரித்த சுற்றுலா பயணிகளின் வருகை

உள்ளூர்April 22, 2026 · 4 months முன்0
இந்த மாதம் அதிகரித்த சுற்றுலா பயணிகளின் வருகை

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் புதிய புள்ளிவிபரங்களின்படி, ஏப்ரல் மாதத்தில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 88,000-ஐக் கடந்துள்ளது.

இதன்படி, இம்மாதத்தில் இதுவரை மொத்தம் 88,221 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களே முதலிடத்தில் உள்ளனர்.
அந்த வகையில் இந்தியாவிலிருந்து 25,634 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதேவேளை ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 828,845 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இலங்கையின் சுற்றுலாத் துறை இவ்வாண்டுக்கான 3 மில்லியன் இலக்கை நோக்கி முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.