2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உள்ளூர்January 27, 2026 · 7 months முன்2
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2026 ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

2025 ஜனவரி மாதத்தின் குறித்த காலப்பகுதியில் சுமார் 4,970 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததாகவும், இந்த வருடம் இதே காலப்பகுதியில் 6,521 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் செயல் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி 1,627 நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் 971 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.