2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஹொரண வைத்தியசாலையின் புதிய பிரிவு திறந்துவைப்பு

உள்ளூர்February 7, 2026 · 6 months முன்0
ஹொரண வைத்தியசாலையின் புதிய பிரிவு திறந்துவைப்பு

ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நோய்த்தடுப்பு சிகிச்சை பிரிவு நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. நோய்த்தடுப்பு சிகிச்சை பிரிவு என்பது மக்களின் சுகாதார தேவையில் முக்கியமான ஒன்றாகும்.

உயிருக்கு அச்சுறுத்தலான நோய் நிலைமைகளினால் பாதிக்கப்படும் நோயாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்பவும் இதனூடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

உடல், உள , சமூக அல்லது ஆன்மீக சார்ந்த பிரச்சினைகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு சரியான மதிப்பீடுகள் மற்றும் சிகிச்சையளிப்பதன் ஊடாக பாதிப்புகளை குறைத்து பராமரிப்பை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்மென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.