2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும்

உள்ளூர்April 18, 2026 · 4 months முன்1
மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும்

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம்  தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டுக்குக் கிடைத்துள்ளதாகவும், மேலும் 17,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைக்கவுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த எரிவாயு கையிருப்புகள் மாலைதீவில் உள்ள மிதக்கும் சேமிப்பு முனையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தவிர, மேலதிகமாக 20,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று தென்னாப்பிரிக்கா ஊடாக மாலைதீவை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி இந்த பண்டிகைக் காலத்தில் நுகர்வோரின் தேவைக்கேற்ப போதுமான எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பண்டிகைக் காலத்தின் பின்னரும் சந்தைக்குத் தேவையான எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, ஏப்ரல் 16 முதல் மீண்டும் வழமை போல் எரிவாயு நிரப்பும் மற்றும் விநியோகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது