2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

வெள்ளத்தால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

உள்ளூர்December 3, 2025 · 9 months முன்0
வெள்ளத்தால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

நாட்டில் நிலவும் வெள்ள நிலைமை காரணமாக எதிர்காலத்தில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டெங்கு, சிக்கன்குனியா மற்றும் எலி காய்ச்சல் ஆகிய நோய்கள் பரவும் கடுமையான ஆபத்து உள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட குறிப்பிட்டுள்ளார்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அண்மையில் நாட்டைப் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக எதிர்காலத்தில் கடுமையான தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் என சுகாதாரத் துறையினர் என்ற வகையில் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதன்படி, டெங்கு, சிக்கன்குனியா மற்றும் எலி காய்ச்சல் பரவும் கடுமையான ஆபத்து நிலவுகிறது.

அதேபோல் தொற்று அல்லாத நோய்களிலும் ஒரு குறிப்பிட்ட அதிகரிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

குறிப்பாக, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்குச் சிகிச்சைப் பெற்ற நோயாளிகளின் சிகிச்சை நிலைமைகள் தற்போது குழப்பமான நிலையை அடைந்துள்ளன.

அவர்களின் மருந்துகள் இந்த அனர்த்த நிலைமை காரணமாகத் தொலைந்திருக்கலாம். எனவே, அவர்கள் குறித்து நாங்கள் விசேட கவனம் செலுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.