2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பாதிக்கப்பட்ட பொதுக்கட்டிடங்கள் புனரமைக்கப்பட வேண்டும்! இம்ரான் மஹரூப்

உள்ளூர்December 9, 2025 · 8 months முன்2
பாதிக்கப்பட்ட பொதுக்கட்டிடங்கள் புனரமைக்கப்பட வேண்டும்! இம்ரான் மஹரூப்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுக் கட்டிடங்களை சுத்தப்படுத்துவதற்கும் கொடுப்பனவுகளை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

திருகோணமலை – கிண்ணியா, சோலைவெட்டுவான் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வெள்ள அனர்த்தித்தின் பாதிப்பில் இருந்து மீள அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது பாதிக்கப்பட்டோருக்கு சற்று நிம்மதியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு நடைமுறையில் நெகிழ்வு தன்மைகள் பேணப்பட வேண்டியுள்ளது. சில வரையரைகளால் அரச அதிகாரிகள் குறிப்பாக கிராம அரசுக்கும் மக்களுக்கும் இடையில் பணிசெய்வதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

அதுபோன்று வீடுகளை சுத்தம் செய்ய வழங்கப்படும் கொடுப்பனவு பாதிக்கப்பட்ட மதத் தளங்கள், முன்பள்ளிகள், கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றுக்கும் வழங்கப்பட வேண்டும். இது குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.