2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

உள்ளூர்November 30, 2025 · 9 months முன்0
விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள், கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையைத் தொடர்ந்தும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, விமான நிலையத்திற்கான சில பிரவேச வீதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதனால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்காலப்பகுதியில் விமான நிலைய வளாகத்தினுள் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, பயணிகளுடன் விருந்தினர்களை முனையத்திற்கு அழைத்து வருவதைத் தவிர்க்குமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (தனியார்) நிறுவனம் பயணிகளிடம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.

சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் விமான நிலைய செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்குப் பயணிகள் வழங்கும் ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வைப் பாராட்டுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.