2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

நெற்செய்கைக்கு தடையின்றி உரம்

உள்ளூர்March 30, 2026 · 5 months முன்2
நெற்செய்கைக்கு தடையின்றி உரம்

2026 ஆம் ஆண்டுக்கான யால பருவப் பயிர்ச்செய்கையின் போது, கையிருப்பிலுள்ள யூரியா உரத்தை நெற்செய்கைக்கு மாத்திரம் வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தற்போது கையிருப்பிலுள்ள உரத்தின் அளவு மட்டுப்படுத்தப்பட்ட மட்டத்தில் உள்ளதைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடு முழுவதுமுள்ள விவசாய சேவை நிலையங்கள் ஊடாக மாத்திரமே இந்த உர விநியோகம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டே விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.