2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இலங்கை அரச துறையில் தொலைதூரப் பணி விரிவாக்கம் – அரசாங்கத்தின் புதிய தீர்மானம்!

உள்ளூர்April 27, 2026 · 4 months முன்3
இலங்கை அரச துறையில் தொலைதூரப் பணி விரிவாக்கம் – அரசாங்கத்தின் புதிய தீர்மானம்!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கையின் அரச துறையில் ‘தொலைதூரப் பணி’ (Remote Work) முறையை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எரிபொருள் பாவனையைக் குறைக்கவும், தேசிய எரிசக்தி இருப்பை முறையாக முகாமைத்துவம் செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையிலான பொதுச் சேவைகள் பராமரிப்புக்கான அமைச்சரவைக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு இணைந்து இதற்கான இடைக்கால வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளன.

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் பரிமாற்றச் சட்டத்தின் கீழ், ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பங்கள் (Scanned Signatures), டிஜிட்டல் கையொப்பங்கள் மற்றும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் பரிமாற்றங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.