2026 October 11, Sunday ⛅ கண்டி 22°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

எல்-நினோ, லா-நினா சவால்களுக்கு அவசர செயலணி கோரிக்கை!

உள்ளூர்June 14, 2026 · 4 months முன்5
எல்-நினோ, லா-நினா சவால்களுக்கு அவசர செயலணி கோரிக்கை!

நாட்டில் ஏற்படக்கூடிய எல்-நினோ (El Niño) மற்றும் லா-நினா (La Niña) காலநிலை மாற்ற சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக, விரைவான ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யோசனை முன்வைத்துள்ளார்.

இலங்கைக் காலநிலை பற்றிய நாடாளுமன்ற ஒன்றியக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்,

“சர்வதேச கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பின் (NOAA) கணிப்புகளின்படி, கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக உயர்வதால் ‘சூப்பர் எல்-நினோ’ நிலைமை ஏற்படுவதற்கு 63% சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இதன் காரணமாகக் கடுமையான வறட்சி அல்லது அதிக மழைப்பொழிவு போன்ற தீவிர காலநிலை மாற்றங்களை நாடு எதிர்கொள்ள நேரிடலாம்.”

கடந்த ஏப்ரல் 7ஆம் திகதியே காலநிலை மாற்றம் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தில் அரச நிறுவனங்களின் நிபுணர்களை அழைத்து இது குறித்து முதன்முதலாகத் தாம் கலந்துரையாடியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தக் காலநிலை மாற்றங்கள் காரணமாக விவசாயம், நீர் முகாமைத்துவம் மற்றும் வனவிலங்கு-மனித மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஏற்படும் ‘லா-நினா’ நிலைமையால் எதிர்பாராத கனமழை பெய்து மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், நீர் தட்டுப்பாடு அதிகரிப்பதன் மூலம் நாட்டின் மின் உற்பத்தியும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.