மின் கட்டணத் திருத்தத்தின் மத்தியிலும் மின்சார சபைக்கு நட்டம்!

மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டு இறுதியில் இலங்கை மின்சார சபையின் மொத்த நட்டம் 38.7 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
இந்த நிதி நெருக்கடிக்கு முக்கியமாக கட்டணக் குறைப்பு,உற்பத்திச் செலவு அதிகரிப்பு இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் கட்டணங்கள் குறைக்கப்பட்டாலும், பருவநிலை மாற்றம் மற்றும் உற்பத்திச் செலவு உயர்வு காரணமாக மின்சார சபை மீண்டும் நிதி ரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளதை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.




