2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

முதியோர் கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டது

உள்ளூர்December 18, 2025 · 8 months முன்0
முதியோர் கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டது

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இன்று முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளின் ஊடாக அந்தந்த பயனாளிகள் இக்கொடுப்பனைவப் பெற்றுக்கொள்ள முடியும் என அச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் 616,346 முதியவர்கள் இக்கொடுப்பனவைப் பெற்றிருந்ததோடு, இதற்காக அரசாங்கம் 3,081,730,000 ரூபாய்க்கும் (3 பில்லியனுக்கும் அதிக) அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது.