2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது!

உள்ளூர்November 22, 2025 · 9 months முன்2
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாத்தளை – கிரிமெட்டியாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மாத்தளை – கிரிமெட்டியாவ பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய ஆணும் 46 வயதுடைய பெண்ணும் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் 567 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி 3 கோடி ரூபா பெறுமதியான வீடொன்றை கட்டியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 20 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களின் சொத்துக்களை முடக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.