2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தேற்றாத்தீவில் பாரிய விபத்து : தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

உள்ளூர்February 27, 2026 · 6 months முன்0
தேற்றாத்தீவில் பாரிய விபத்து : தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று அதிகாலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி பகுதியிலிருந்து மருதமுனை நோக்கிச் சென்று கொண்டிருந்த வட்டா ரக வாகனமே தேற்றாத்தீவு கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாலிருந்து மின் கம்பத்தில் மோதுண்டு விபத்துள்குள்ளாகியுள்ளது.

வட்டாரக வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி இதன்போது எதுவித ஆபத்துக்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார்.

எனினும் குறித்த வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மின்கம்பமும் உடைந்து வீழ்ந்துள்ளது. இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.