2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 36°
LIVE
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!

CID முன் முன்னிலையாகுமாறு வைத்தியர் ருக்ஷன் பெல்லனவுக்கு அழைப்பு!

உள்ளூர்January 17, 2026 · 7 months முன்1
CID முன் முன்னிலையாகுமாறு வைத்தியர் ருக்ஷன் பெல்லனவுக்கு அழைப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்னாள் துணை இயக்குநர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன, குற்றப் புலனாய்வுத் துறையின் முன் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் கொலைப் புலனாய்வுப் பிரிவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 9, 2025 அன்று முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்ட காணொளி தொடர்பாக இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.

“ருக்‌ஷன் பெல்லனாவ சுட அனில் ஜெயசிங்க தயாராகி வருகிறார்” என்று கூறும் காணொளியில் அசேல சம்பத் என்ற நபர் தெரிவித்தது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க மருத்துவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, பழைய பொலிஸ் தலைமையகக் கட்டடத்தின் 4வது மாடியில் அமைந்துள்ள கொலைப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.