2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் உரையாடல்

உள்ளூர்January 24, 2026 · 7 months முன்0
வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் உரையாடல்

இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெனிசுலாவின் வெளிவிவகார அமைச்சர் இவான் கில் பின்டோவுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலை நடத்தியுள்ளார். 

நேற்று இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாக அமைச்சர் விஜித ஹேரத் தனது X சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், இரு வெளிவிவகார அமைச்சர்களுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து அந்த X பதிவில் மேலதிக விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

வெனிசுலாவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக சர்வதேச கவனம் அதிகரித்துள்ள பின்னணியில், இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். 

இந்தப் பின்னணியில், வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக, கடந்த ஜனவரி 05ஆம் திகதி வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அந்த அறிக்கையில், வெனிசுலாவின் நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைய பலத்தைப் பிரயோகிப்பதைத் தடை செய்தல், தலையிடாமை, சர்வதேச பிணக்குகளை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளல் மற்றும் நாடுகளின் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை வலியுறுத்தியிருந்தது.