2026 October 17, Saturday ⛅ கொழும்பு 24° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஓய்வு வயதை அதிகரிக்க கோரிக்கைகள்!

உள்ளூர்July 13, 2026 · 3 months முன்1
ஓய்வு வயதை அதிகரிக்க கோரிக்கைகள்!

ஓய்வுபெறும் வயதை மாற்றுவது தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைத்து வருவதாகவும், இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

நேற்று (12) இடம்பெற்ற மீரிகம வைத்தியசாலையின் சிறுநீரகக் கற்களை அகற்றும் புதிய சிகிச்சை பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

பல்வேறு தொழில் வல்லுநர்களால் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கமைவாக இந்தக் கோரிக்கைகளை பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் அங்கு தெரிவித்தார். 

அங்கு கருத்துத் தெரிவித்த சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, 

ஏற்கனவே பல்வேறு தரப்பு தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைத்துள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றத்தில் மாத்திரமன்றி சுகாதார சேவையில் உள்ள சில தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. 

சிறைச்சாலைகள் திணைக்களத்திலிருந்தும் கோரிக்கைகள் உள்ளன. ஏனைய சில தொழில் வல்லுநர்கள் தங்களால் மேலும் சிறிது காலம் பணியாற்ற முடியும் எனத் தெரிவித்து, இந்த ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான யோசனையொன்றை முன்வைத்துள்ளனர். 

சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். ஆனால் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் அந்தக் கோரிக்கைகளை நாம் பரிசீலித்து வருகிறோம் என்றார்.