2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டியவுக்கு ஜனாதிபதி அஞ்சலி!

உள்ளூர்December 4, 2025 · 9 months முன்3
கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டியவுக்கு ஜனாதிபதி அஞ்சலி!

வென்னப்புவ, லுனுவில பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​உயிரிழந்த கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடல் வைக்கப்பட்டுள்ள இரத்மலானையில் உள்ள வீட்டிற்கு இன்று (04) காலை ஜனாதிபதி சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். விமானியின் மனைவி, பெற்றோர், சகோதர, சகோதரிகள் மற்றும் குடும்பத்தினருக்கு அவர் தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.