2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கொழும்பு கிரேண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கி சூடு

உள்ளூர்September 6, 2025 · 11 months முன்1
கொழும்பு கிரேண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கி சூடு

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியில் மஹவத்த கடிகார தூணிற்கு அருகில் நேற்றிரவு துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஒருவர் காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்கதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காயத்திற்குள்ளான குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

களனி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.