2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

உள்ளூர்January 26, 2026 · 7 months முன்3
டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதன்போது, குறித்த வழக்கு தொடர்பான மேலதிக சாட்சி விசாரணைகளை பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி முதல் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை மற்றும் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்களை வழங்கியதன் மூலம் குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாகக் கூறி, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: – நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை தடைசெய்துள்ளது.