2026 October 17, Saturday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்

உள்ளூர்April 17, 2026 · 6 months முன்5
300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்

பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த கார் ஒன்று, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவிற்குள் விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் இன்று (17) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். 

இந்த விபத்தின் போது சம்பவ இடத்திலேயே ஆண் ஒருவர் பலியாகியுள்ளதுடன், காரின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். 

இவர்கள் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

காயமடைந்த மூவரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, உயிரிழந்தவரின் சடலம் அதே வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாகப் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்