2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நுவரெலியா கிரகரி வாவிக் கரையில் சிசுவின் சடலம் மீட்பு

உள்ளூர்February 1, 2026 · 7 months முன்3
நுவரெலியா கிரகரி வாவிக் கரையில் சிசுவின் சடலம் மீட்பு

நுவரெலியா கிரகரி வாவிக் கரையோரத்தில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் இன்று காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கிரகரி வாவியில் படகு சவாரி செய்யும் ஊழியர்கள் மற்றும் உயிர் காப்பு பொலிஸார் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் தடயவியல் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் குறித்த சடலம் புதிதாக பிறந்த சிசு ஒன்றினுடையது என்பதை உறுதி செய்துள்ளனர்.

மேலும் தொப்புள் கொடியின் ஒரு பகுதி இன்னும் இருப்பதையும் கண்டறிந்தனர் இதனால், இந்தப் பிரசவம் வைத்தியசாலையில் நடைபெறவில்லை என பொலிஸார்  சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து பொலிஸார், நீதிமன்ற உத்தரவை பெற்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் ,

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர் .

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.