Search

Dec 23, 2025

உலகம்

டெக்சாஸில் மெக்சிகோ மருத்துவ விமானம் விபத்து – 5 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள கல்வெஸ்டன் விரிகுடா அருகே, மெக்சிகோவுக்குச் சொந்தமான மருத்துவ சேவை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து ஏற்பட்ட சமயம் விமானத்தில் எட்டு பேர் இருந்தனர். அவர்களில் நால்வர் பொதுமக்களாகவும், மீதமுள்ள நால்வர் மெக்சிகோ கடற்படையினராகவும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் இரண்டு வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னொருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் முகாமில் பங்கேற்பதற்காகவே குறித்த விமானம் பயணித்ததாக மெக்சிகோ கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. விபத்து நேர்ந்த போது அப்பகுதியில் நிலவிய அடர்த்தியான பனிமூட்டமே காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All