
jino
Jul 24, 2026
உலகம்
இலண்டன் - இலங்கை தூதரகம் மற்றும் இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.

தமிழ் மக்கள் வாழ்வில் என்றும் அழியாத வடுவாக காணப்படும் கறுப்பு யூலை கலவரம் இடம்பெற்று 43 வருடங்கள் கடந்த நிலையில் இன்றும் தமிழர்கள் மீது தொடரும் அடக்கு முறைகளுக்கு எதிராக இலண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக இன்று ஒன்று கூடிய புலம்பெயர் தமிழ் உறவுகளால் இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கறுப்பு ஜூலை, செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பும் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையிலும், செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி கறுப்பு யூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு முன்னெடுக்கப்பட்டன.


Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





