
Rebecca
Feb 17, 2026
உள்ளூர்
ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலக்கம் 943 தபால் ரயில், இன்று (17) அதிகாலை கித்துல்உத்துவ 151ஆவது மைல்கல் அருகே காட்டு யானையுடன் மோதி தடம் புரண்டது.
இந்த விபத்தில் காட்டு யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
காட்டு யானை ரயிலின் இயந்திரத்தில் மோதியதுடன், அதன் காலின் ஒரு பகுதி இயந்திரத்தில் சிக்கியதன் காரணமாகவே ரயில் இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கவுடுல்ல வனப்பகுதியிலிருந்து சோமாவதிய வனப்பகுதிக்கு தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த யானை சுமார் 15 வயதுடையது எனவும், அது சுமார் 7 அடி உயரம் கொண்டது எனவும் அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






