
janani
Jul 24, 2026
உள்ளூர்
பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு: பரீட்சை தொடர்பான முக்கிய விவரங்கள் வெளியீடு!

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள 2,723 மையங்களில் குறித்த பரீட்சை ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்படவுள்ளது. இதற்கமைய, பரீட்சையின் இரண்டாம் பாகம் முற்பகல் 9.30 முதல் 10.45 மணி வரையிலும், முதலாம் பாகம் முற்பகல் 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரையிலும் இடம்பெறும்.
அத்துடன், விண்ணப்பதாரர்களின் வருகைப் பதிவேடுகள் சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தங்களது தகவல்களைத் திருத்த வேண்டியுள்ள விண்ணப்பதாரர்கள் www.doenets.lk அல்லது http://onlineexams.gov.lk ஆகிய இணையதளங்கள் ஊடாக ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 3, 2026 வரை இணையவழியில் திருத்தங்களைச் செய்து கொள்ள முடியும்.
மேலதிக தகவல்களுக்கு 011-2784208, 011-2784537, 011-2786616, 011-2785413 ஆகிய இலக்கங்களையோ அல்லது 1911 என்ற துரித இலக்கத்தையோ தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






