
janani
Apr 26, 2026
உலகம்
வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட பரபரப்பு : துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் (WHCD) வருடாந்த இரவு விருந்து நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருதப்படும் சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சிச் சம்பவம் குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், பாதுகாப்புப் பிரிவினரின் துரிதமான மற்றும் துணிச்சலான நடவடிக்கையை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
"பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் மிகச்சிறந்த பணியைச் செய்தனர். சந்தேக நபர் பிடிக்கப்பட்டுள்ளார்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முதற்பெண்மணி மெலனியா ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக இருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





