
puja
Aug 7, 2026
உள்ளூர்
சிறைச்சாலைகளில் என்ன நடக்கிறது? ஜனாதிபதி தலைமையில் முக்கிய கூட்டம்!

சிறைச்சாலைகளில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், இச்சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், சிறைச்சாலைகளில் இவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கமைய, நீதி அமைச்சரின் தலைமையில் அமைச்சரவைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





