Search

janani

Apr 27, 2026

உள்ளூர்

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All