Search

admin

May 9, 2026

உள்ளூர்

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் வெற்றிகரமாக நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் இந்நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கு இணங்க, இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டிருந்த வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (TO LAM) உள்ளிட்ட தூதுக்குழுவினர், தமது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, நேற்று (08) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

வியட்நாம் – இலங்கை இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கும் பல்வேறு நன்மைகளை பெற்றுத்தரும் வகையில், வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கையில் வெற்றிகரமான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All

உள்ளூர்

நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால், ஏரியின் வான் கதவுகள் இன்று (04) பிற்பகல் திறக்கப்பட்டதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நுவரெலியா பகுதியில் நிலவும் கடும் சீரற்ற காலநிலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, பாதுகாப்பு காரணங்களுக்காக கிரிகோரி ஏரியில் படகு சவாரி செய்வதை நுவரெலியா மாநகர சபை தற்காலிகமாக தடை செய்துள்ளது. இதேவேளை, நுவரெலியா - பதுளை பிரதான வீதி, நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதி மற்றும் நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் தொப்பஸ் முதல் லபுகலை வரையிலான பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால், அந்த வீதிகளில் பயணிக்கும் போது வாகன ஓட்டுநர்கள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

த்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 4.84 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2026 ஜூலை மாதத்தில் 25,622 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளதுடன், இது இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது. ஜூன் மாதத்தில் 24,440 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றிருந்தனர். இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் அரசாங்கம் எட்டியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காரணமாக அந்நாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் இலங்கையர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, ஜூலை மாதத்தில் இஸ்ரேலுக்கு 2,521 பேரும், தென் கொரியாவுக்கு 1,618 பேரும், ஜப்பானுக்கு 79 பேரும் சென்றுள்ளனர். அத்துடன், ஜப்பானில் உற்பத்தி, கட்டுமானம், செவிலியர் பராமரிப்பு மற்றும் விவசாயத் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்ற 14 இளைஞர், யுவதிகளுக்கு நேற்று (03) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வைத்து விமான பயணச்சீட்டுகள் வழங்கி வைக்கப்பட்டன. இதேவேளை, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களால் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வருவாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More