
admin
Feb 14, 2026
உள்ளூர்
SLPPயை விட்டு வெளியேறிய சோமரதன தேரர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் செயற்பாடுகள் காரணமாக, அக்கட்சியின் கலென்பிந்துனுவெவ பிரதேச சபை உறுப்பினராகப் பணியாற்றிய வணக்கத்திற்குரிய அநுராதபுர சோமரதன தேரர் அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
அதற்கமைய, அவர் சர்வஜன அதிகாரம் கட்சியின் மிஹிந்தலை தொகுதி அமைப்பாளர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.
திஸ்ஸகுட்டி ஆராச்சி அநுராதபுர மக்கள் தொடர்பில் வெளியிடும் சில கருத்துக்களும் அவரது செயற்பாடுகளுமே தாம் கட்சியிலிருந்து விலகக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலை தொடர்ந்தால், அநுராதபுர மாவட்டத்தில் பொதுஜன பெரமுன தனிமைப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






