
janani
Mar 24, 2026
உள்ளூர்
கடும் வீழ்ச்சியடைந்த மரக்கறிகள் விற்பனை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக உள்நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் மரக்கறிகளுக்கான கேள்வி (Demand) பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வால் வீதிகளில் ஓடும் பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதால், பொதுப் போக்குவரத்துச் சேவை ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இதனால் நுகர்வோர் சந்தைகளுக்கு வந்து மரக்கறிகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். உபசேன தெரிவித்துள்ளார்.
அன்றாட வருமானம் ஈட்டும் தரப்பினர் போக்குவரத்து முடக்கத்தால் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இது மக்களிடையே மரக்கறிகளை வாங்கும் திறனைக் குறைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகள் மரக்கறி பயிர்ச்செய்கையை நிறுத்தினால், எதிர்காலத்தில் விற்பனை செய்வதற்கு சந்தையில் மரக்கறிகளே இல்லாத நிலை உருவாகலாம்" என அவர் மேலும் தெரிவித்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





