
janani
Mar 30, 2026
உலகம்
எண்ணெய் விலை குறித்து அமெரிக்கா கடும் அறிவிப்பு

உலகளாவிய ரீதியில் எரிபொருள் மற்றும் நுகர்வோர் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறப்பதே "ஒரே தீர்வு" என அமெரிக்க எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் உயர்மட்ட அமைப்பான அமெரிக்க பெட்ரோலிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மைக் சோம்மர்ஸ் (Mike Sommers), இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் "இந்த வாரத்திற்குள் இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும்.
காலதாமதம் ஏற்படும் ஒவ்வொரு நிமிடமும் எரிபொருள் விலை மேலும் அதிகரித்துக்கொண்டே செல்லும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





