
janani
Apr 8, 2026
உலகம்
அமெரிக்கா- ஈரான் வான்வழி சேவை மீண்டும் ஆரம்பம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிகப் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஈராக் தனது வான்பரப்பை இன்று முதல் மீண்டும் திறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கில் அமெரிக்கா - இஸ்ரேல் , ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் ஈராக்கிய வான்பரப்பு சுமார் 40 நாட்களாக மூடப்பட்டிருந்தது.
தற்போது இரு தரப்பிற்கும் இடையே எட்டப்பட்டுள்ள 15 நாள் போர் நிறுத்த உடன்படிக்கையினால் பிராந்தியத்தில் அமைதி நிலவுவதை அடுத்து, ஈராக்கின் சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகாரசபை அனைத்து வானூர்தி நிலையங்களையும் மீள இயக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





