
admin
Dec 28, 2025
உள்ளூர்
ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் காலமானார்.

மலையகத்தின் மூத்த இடதுசாரி தொழிற்சங்கவாதி மற்றும் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஆ. முத்துலிங்கம், நியூமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டு பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி தனது 79ஆம் வயதில் சனிக்கிழமை (27) இறந்தார் என்று அவரது மகன் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
அவர் தனது இறுதிக் காலம் வரை தொழிலாளர் நலனுக்காக பணியாற்றியவர்; மலையக மக்களின் சமூக நலனுக்காக பல அமைப்புகளில் ஈடுபட்டு, காணி உரிமை இயக்கத்தில் குரல் கொடுத்தவர். பல கட்டுரைகளை தேசிய பத்திரிகைகளில் எழுதி மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இறுதிக் கிரியா பதுளை பொது மயானத்தில் 29ஆம் திகதி மாலை 3:30 மணிக்கு நடைபெறும். மேலதிக தகவல்களுக்கு அவரது மகன் அரவிந்த் (0787754424) தொடர்புகொள்ளலாம்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






