
puja
Aug 3, 2026
உள்ளூர்
சீரற்ற வானிலை! பாடசாலை விடுமுறைக்கு அதிபர்களுக்கு அதிகாரம்

மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இதற்கமைய, ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அனைத்து வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





