Nivin
Aug 25, 2025
தொழில்நுட்பம்
"AI" மூலம் குற்றங்களை முன்கூட்டியே தடுக்க இங்கிலாந்து அரசின் புதிய முன்னெடுப்பு.
"வெள்ளம் வரும் முன் அணைக்கட்டு' என்பது போல AI மூலம் குற்றங்கள் நடப்பதட்கு முன்பே தடுக்க இங்கிலாந்து அரசு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், இங்கிலாந்து அரசு தற்போது செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) மூலம் குற்றங்களை முன்னதாகவே கணித்து தடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சம், `குற்ற வரைபடம் (crime map)' என்ற முறையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எந்த நேரத்தில், எங்கு குற்றம் நடைபெற வாய்ப்புள்ளது என்பதைக் கணிப்பதாகும்.

இந்த AI அமைப்பு, காவல்துறை, சமூக நலத்துறை தரவுகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்யும்.
குறிப்பாக கத்திக்குத்து சம்பவங்கள், கொள்ளை, வன்முறை தாக்குதல்கள், சமூக விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்னதாகவே கணித்து போலீஸாருக்கு எச்சரிக்கை அனுப்புவதே இதன் நோக்கம்.
இந்த AI அமைப்பு, காவல்துறை, சமூக நலத்துறை தரவுகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்யும்.
குறிப்பாக கத்திக்குத்து சம்பவங்கள், கொள்ளை, வன்முறை தாக்குதல்கள், சமூக விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்னதாகவே கணித்து போலீஸாருக்கு எச்சரிக்கை அனுப்புவதே இதன் நோக்கம்.

இத்திட்டத்தின் முதற்கட்ட முதலீடாக சுமார் 4 மில்லியன் பவுண்டுகள் அரசால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த முதலீட்டின் அடிப்படையில் 2026 ஏப்ரல் மாதத்திற்குள் ஒரு செயல் மாதிரி தயாராகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், முழுமையான செயல்பாட்டை 2030க்குள் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 500 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.
இந்த முயற்சியின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது பழைய குற்றப் பதிவுகளை மட்டும் காட்டும் வரைபடம் அல்ல மாறாக, முன்கூட்டியே கணித்து செயல்பட உதவும் என்பதால், காவல்துறைக்கு குற்றங்களைத் தடுக்கும் திறன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், இங்கிலாந்தின் இந்தப் புதிய AI குற்ற வரைபடம் திட்டம் காவல்துறை பணியில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All