Search

janani

Mar 30, 2026

உலகம்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிடில் தாக்குதல் உறுதி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானின் புதிய மற்றும் நியாயமான ஆட்சியுடன் அமெரிக்கா "தீவிரப் பேச்சுவார்த்தைகளில்" ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


தற்போது நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது முறையான உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்பதை ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை சர்வதேச சந்தையில் மேலதிக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All