Search

admin

Jun 12, 2026

உள்ளூர்

ஈரான் மீதான தாக்குதல் திட்டம் ரத்து – டிரம்ப்

ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 ஈரான் தலைமையும் பிராந்தியத்தின் பல நாடுகளும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 இருப்பினும், இறுதி உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகை தொடர்ந்து நீடிக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

 குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் திகதி, நேரம் மற்றும் இடம் போன்ற விபரங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 இதேவேளை, டிரம்பின் இந்த அறிவிப்புத் தொடர்பாக ஈரான் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All