Search

Aug 14, 2025

உலகம்

காட்டுத்தீயை அணைக்க ஐரோப்பிய நாடுகளின் உதவியை நாடும் - ஸ்பெயின் !

ஸ்பெயின் முழுவதும் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க தனது ஐரோப்பிய நாடுகளின் உதவியை நாடுகிறது என்று ஸ்பெய்ன் உட்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே மார்லாஸ்கா தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, இரண்டு கனடேர் விமானங்களை தேவைப்படுவதாக மார்லாஸ்கா குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

தற்போது எங்களுக்கு இரண்டு கனடேர் விமானங்கள் அவசரமாக தேவையில்லை, ஆனால், வானிலை முன்னறிவிப்பைக் கருத்திற் கொண்டு, அந்த விமானங்களை விரைவில் எங்கள் தேசிய பிரதேசத்தில் வைத்திருக்க விரும்புகிறோம், இதனால் அவை தேவைப்பட்டால் அவற்றைப் பயன்படுத்தலாம், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்போதைக்கு அது அவசியமில்லை என்றாலும், ஐரோப்பிய நட்பு நாடுகளிடமிருந்து கூடுதல் உதவியை நாட ஸ்பெயின் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All