Search

Sep 2, 2025

உலகம்

புட்டினிடம் - மோடி கோரிக்கை.

உக்ரைனுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டுக்கு இடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை,இந்திய பிரதமர் மோடி நேற்று (1) சந்தித்து உரையாடியிட்டுள்ளார்.

- இவ் சந்திப்புக்குப் பின், இந்திய பிரதமர் மோடி கூறியதாவது,

ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடனான சந்திப்பு எப்போதும் மறக்க முடியாதது. வரும் டிசம்பரில் ஜனாதிபதி புட்டினின் இந்திய வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

கடினமான காலங்களிலும் கூட இந்தியாவும், ரஷ்யாவும் ஒன்றாக நிற்பதில் இருந்து எங்கள் நட்பின் சிறப்பையும், கூட்டாண்மையின் ஆழத்தையும் அறிந்து கொள்ளலாம்.

மிகக் கடினமான சூழ்நிலைகளிலும், தோளோடு தோளாக நின்று பணியாற்றி வருகிறோம்.உக்ரைன் உடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். மோதல் விரைவில் முடிவுக்கு வரவேண்டும்.

மேலும், உக்ரைனில் நீடித்த அமைதிக்கான பாதையை விரைவாக கண்டறிய வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாகும். சமாதானத்தை நோக்கி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். மேலும், இம்முயற்சியில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறேன். என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All